
க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது
எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த 2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய, புதிய திகதி தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அடுத்த வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வருட இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு மீண்டும் பரீட்சை பிற்போட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
