அவிசாவளையில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு

அவிசாவளை – தல்துவ – குருபஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளையிலிருந்து கேகாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் குறித்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள், 27 மற்றும் 36 வயதுடைய தல்துவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் 42 மற்றும் 43 வயதுடைய தல்துவ பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.