ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது Batticaloa Campus

 

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ்வினால் ரிதிதென்னை பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பட்டிகலோ கம்பஸ் (Batticaloa Campus) எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இன்று புதன்கிழமை காலை இராணுவத்தினரால் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்விடம் பட்டிகலோ கம்பஸ் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி உள்ளார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதுல் சம்பவத்தினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த கம்பஸ் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.