கல்குடா கல்வி வலயத்தில் இடம்பெற்ற சதுரங்க போட்டி நிகழ்வு

கிரான் நிருபர்

மாணவர்களின் ஆழமாக சிந்திக்கும் திறன் மற்றும் ஆக்கத் திறன்களை மேம்படுத்தும் முகமான சதுரங்க விளையாட்டுப் சுற்றுப்போட்டியானது வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.

கல்குடா கல்வி வலயத்தின் ஆலோசனையுடன் இந்துக்கல்லுரி அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஒத்துழைப்புடன் பழைய மாணவர் சங்கத்தினால் இவ் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ் போட்டி நிகழ்ச்சியில் அகில இலங்கை ரீதியில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற சதுரங்க சுற்றுப்போட்டியானது மட்டுப்படுத்தப்பட்ட, திறந்த போட்டியாக அமைந்தது, சுமார் 285 போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தனர்.முதல் நாள் ஆரம்ப நிகழ்வானது வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உப தலைவர் லயன் கே.லோகேந்திரன் தலைமையில் ஆரம்பமானது.

இதன் போது அதிதிகள் மலர்கொத்து வழங்கி வரவேற்கப்பட்டு போட்டி நிபந்தனைகள் அறிவுறுத்தப்பட்டு சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2ஆம் நாள் நிகழ்வானது கல்லூரி அதிபர் திருமதி துஸ்யபிரியா சுரேஸ்குமார் தலைமையில் பரிசழிப்பு நிகழ்வு நடைபெற்றது.இதன்போது நடைபெற்ற போட்டியில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வெற்றிப்பதக்கம், சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

திறந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தொகையாக 25000 ரூபாவும் 2 ஆம் பரிசு தொகையாக 15000 ரூபாவும் 3 ஆம் பரிசு தொகையாக 10000 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் பிரதேசத்தில் சதுரங்க விளையாட்டுக்கு வித்திட்டவரான பா.சுசிகரன் என்பவரது சேவையை பாராட்டி கல்லூரி சமூகத்தினால் அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதியாக சர்வதேச தர சதுரங்க விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திவான்க திசேரா,ஓய்வு பெற்ற கோட்டை கல்வி அதிகாரி ச.பரமேஸ்வரன்.அசிரியர் சின்னத்தம்பி,பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் தலைவர் நாகராசா மற்றும் கல்லூரி அபிவிருத்தி சங்கத் தலைவர் சா.ரவிக்குமார் ஆகியோர்கள் பங்குபற்றியிருந்தார்.