
மழை நீரால் நிரம்பியிருந்த குழிக்குள் வீழ்ந்த பாடசாலை மாணவி
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் அகழப்பட்டிருந்த குழி ஒன்றில் வீழ்ந்து பாடசாலை மாணவியும் அவரது தந்தையும் காயமடைந்துள்ளனர்.
கொதட்டுவ ஐ டி எச் வைத்தியசாலையின் சந்தியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்களால் குறித்த குழியானது அகழப்பட்டு பின்னர் மூடப்படாமல் காணப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழைக்காரணமாக குழியானது நீரினால் நிரம்பி காணப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த மாணவி மற்றும் அவரது தந்தை ஆகியோர் 15 அடி ஆழமுடைய குழிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவியும் தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதனையடுத்து பொலிஸாரால் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து குழியினை மூடுவதற்கும் அப்பகுதியில் சமிஞ்ஞை கொடியொன்றை நடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
