ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில் சந்தேக நபரை இன்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.