
34,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பனிஸ்
தம்புள்ள பிரதேசத்தில் பனீஸ் வகையொன்று 34,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சிங்கள் மக்கள் வாழும் பகுதிகளில் கிம்புலா பனீஸ் எனவும் தமிழ் பிரதேசங்களில் சீனி பனீஸ் எனவும் அழைக்கப்படும் பனீஸ் வகையொன்றே இவ்வாறு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றில் இவ்வாறு குறித்த பனீஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த பனீஸை ஜெர்மன் பிரஜைகள் சிலர் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சிலருக்கும் ஜெர்மனிய பிரஜைகளுக்கும் இடையில் இந்த பனிஸை கொள்வனவு செய்வது தொடர்பில் ஏலம் நடைபெற்றுள்ளது.
இந்த ஏல விற்பனையில் ஜெர்மனிய பிரஜைகள் 34,600 ரூபா விலையை நிர்ணயித்து அதனை கொள்வனவு செய்துள்ளனர்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட பனிஸை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு ஜெர்மனிய பிரஜைகள் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
