ரயிலின் மேற்பகுதியில் இருந்து பயணித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

ரயிலின் மேற்பகுதியில் ஏறி இருந்து பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை பயணித்த ரயிலின் மேற்பகுதியில் ஏறிய குறித்த இளைஞன் ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில் மோதியதாக தெரிவிக்கப் படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.