
பாடசாலையின் நுழைவாயிலை மூடி போராட்டம்
கிளிநொச்சி கோனாவில் மகாவித்தியாலயத்தில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களை நிவர்த்தி செய்யுமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் நுழைவாயிலை மூடி இன்று செவ்வாய்க்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோணாவில் மகாவித்தியாலயத்திற்கான போதிய ஆசிரிய வளங்கள் நிவர்த்தி செய்யப்படாமையினால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி பெற்றோர்களால் தொடர்ச்சியாக மாகாண கல்வி திணைக்களம் வலய கல்வித் திணைக்களம் ஆகியனவற்றிற்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை உரிய அதிகாரிகள் நியமனம் செய்யும் போதும் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகம் தரவில்லை என்றும் இதுதொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


