
ஆசிய கிண்ண தொடர் : நாணய சுழற்சியில் இந்திய அணி வெற்றி!
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்று இடம்பெற்று வருகின்றது.
சுப்பர் 4 சுற்றின் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
