
ரயில் இயக்குநர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு : 36 ரயில் சேவைகள் ரத்து
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இயக்குநர்கள் சங்கம் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை இதுவரையான காலப்பகுதியில் 36 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அலுவலக ரயில்கள் உள்ளிட்ட 36 சேவைகள் இவ்வாறு ரத்தாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ரயில் இயக்குனர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
