
3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி
3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மருத்துவம் படிக்க தகுதியான பல மாணவர்கள் உள்ளனர். எனினும் நாட்டில் தற்போது 11 பல்கலைக்கழகங்களே உள்ளன. இது அவர்களின் கல்வி நடவடிக்ககைகளை முன்னெடுக்க போதாது.
எமது நாட்டில், பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டமும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதேதரத்தில் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டால் அதிலிருந்து சிறந்த வைத்தியர்களை நாம் உலக மருத்துவ துறைக்கு வழங்க முடியும்.
எனவே அதற்கு இணையான திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் என்ற வகையில் 3 தனியார் பல்கலைகழகங்களை உருவாக்க தமது அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
