
பயனாளர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கான இலவச வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
பெரண்டினா லைப் லைன் பயனாளர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கான 3500 ரூபாய் பெறுமதியான இலவச வவுச்சர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை மாலை வெருகல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பெரண்டினா லைப் லைன் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.
பெரண்டினா சேருநுவர கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெருகல், மூதூர், சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 2109 பயனாளிகளுக்கு இவ் வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதோடு, 40 பயனாளிகளுக்கு பண வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் பிரதி செயலாளர் தவமுரளிதரன், சேருநுவர பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ஹேரத், பெரண்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திருச் செல்வம், சேருநுவர கிளையின் முகாமையாளர் பா.வதனன் மற்றும் பெரண்டினா லைப் லைன் நிறுவனத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



