திருகோணமலையில் மான்களின் உணவிற்கான விற்பனை நிலையம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலையில் மான்களுக்கான இயற்கை உணவை வழங்கும் நோக்குடனும், சுற்றுலா துறையினை ஊக்குவிப்பதற்காகவும், மான்களுக்கான மருத்துவ செலவு, மான் பூங்கா அழகுபடுத்தும் நோக்குடனும் மான்களுக்கான உணவு விற்பனை நிலையம் திருகோணமலை மான் பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுனர் . செந்தில் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைய கிழக்கு மாகாண சுற்றுலா துறை தவிசாளர் ஏ.பி.மதனவாசன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் வி.ராஜசேகர் அவர்களது ஆதரவோடு டிரின்கோ ஏய்ட் நிறுவனத்தினால் லைன் கிளப் ஓபி திருகோணமலை டவுன், லைன் கிளப் ஓபி செண்டெனில் பாரடைஸ் (Lion Club of Trincomalee Town, Lion Club of Centennial Paradise) ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் இவ் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலா துறை தவிசாளர் ஏ.பி.மதனவாசன் அவர்கள், திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் வி.ராஜசேகர் அவர்கள், ரிங்கோ எய்ட் இன் பணிப்பாளர் திருமதி. தயாளினி ஹரிகரன் அவர்கள், திட்ட ஆலோசகர் அனுஜன் அவர்கள், நிகழ்ச்சி முகாமையாளர் ச.நவநீதன் லயன் எம்.எம். ஜலாதீன் (லயன் கிளப்), லயன் எஸ். கோபிநாத் (லயன் கிளப்), லயன் ஃபிலாய்ட் பார்தெலோட் (லயன் கிளப்) மற்றும் லயன் கிளப் உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், தன்னார்வளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.