
முகாமில் இருந்து துப்பாக்கியை களவாடிச் சென்ற சிப்பாய் பிடிபட்டார்
யாழ். இயக்கச்சி இராணுவ முகாமில் இருந்து ரி-56 2 வகைத் துப்பாக்கி ஒன்றை களவாடிச் சென்ற இராணுவச் சிப்பாய் அறிவியல் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இயக்கச்சி இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் காவல் கடமையில் இருந்த சமயம் அவரது துப்பாக்கியும் 4 ரவைக் கூடுகள், ரவைகள் என்பவை களவாடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு களவாடப்பட்ட துப்பாக்கி இராணுவப் புலனாய்வாளர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் அதே முகாமில் பணியாற்றும் சக இராணுவச் சிப்பாய் ஒருவரும் காணாமல் போயிருந்ததை அவதானித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதானல் சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மேற்கொண்ட சோதனையில் காணமல் போன சிப்பாய் பயணிப்பது கண்டறியப்பட்டதனால் ரயிலில் மேற்கொண்ட தொடர் சோதனையில் இராணுவச் சிப்பாய் எடுத்துச் சென்ற பயணப் பையும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட இராணுவச் சிப்பாயின் பயணப்பையில் மிகவும் நூதனமாக பொதி செய்யப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டதோடு இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாயிடம் இராணுவப் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இராணுவச் சிப்பாயின் சொந்த ஊரான குருநாகலில் சிப்பாயின் மனைவியுடன் ஒருவர் கள்ளத் தொடர்பில் இருப்பதனால் அவரை சுட்டுக்கொல்லும் நோக்கில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் நேற்று திங்கட்கிழமை அன்று கிளிநொச்சி, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபொழுது எதிர்வரும் திகதி13 ஆம் வரை விழக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.
