
இலங்கையில் எனக்கான பொறுப்புகள் அதிகரித்து விட்டன: மனோகணேசன்
– யாழ் நிருபர் –
கனடாவிற்கு நான் இந்தத் தடவை கனடிய தமிழர் பேரவையினால் நடத்தப்பெற்ற ‘தமிழர் திருவிழா’ விற்காகவே அழைக்கப்பட்டேன். ஆனால் நான் இங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில் கனடாவில் உள்ள பல தரப்பினரிமிருந்தும் அமைப்புக்களிடமிருந்தும் நான் செவிமடுத்த கருத்துக்களை தாயகத்திற்கு காவிச் செல்கின்றேன். இலங்கையிலும் எனக்கான பொறுப்புகளும் பணிகளும் அதிகரித்து விட்டன என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கனடிய தமிழர் பேரவை நடத்திய ‘தமிழர் திருவிழா 2023’ கடந்த வாரம் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.
அந்த நிகழ்வின்போதுகனடாவில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களை சந்தித்தவேளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
