தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு

– யாழ் நிருபர் –

கடந்த மாதம் 31ஆம் திகதி பளை முகமாலை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஆணொருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் ஞாயிற்று கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளதுடன் இது குறித்து இரு சந்தேகபர்கள் நேற்றையதினம் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த யதீஸ்குமார் (வயது – 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முகமாலை பகுதியையும் மற்றையவர் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது ஒரு கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகபர்களை இன்றையதினம் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை புரட்டாதி மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்