வேகக்கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரம் விபத்து: சாரதி படுகாயம்

கிளிநொச்சி முரசமோட்டை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இரவு ஏழு முப்பது மணி அளவில் கிளிநொச்சி பகுதியில் இருந்து முரசுமோட்டை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

அவர் தனது வீடு நோக்கி உழவு இயந்திரத்தில் பயணித்த பொழுது வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரம் விபத்து: சாரதி படுகாயம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்