கிண்ணியாவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157வது பொலிஸ் தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட துஆப் பிரார்த்தனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா நத்வதுல் புகாரி அரபுக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

நத்வதுல் புஹாரி அறபு கல்லூரியின் அதிபர் மௌலவி எஸ்.முனீர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிரகமன்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி , கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணாண்டோ மற்றும் கிண்ணியா உலமா சபை,  பொலிஸ் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், அரபிக் கல்லூரி மாணவர்கள் உலமாக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஐந்து குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.