
நிர்ணய விலையில் கோழி இறைச்சியை விற்க முடியாது
அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையின் அடிப்படையில் கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக ஹட்டன் பிரதேச கோழி இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள் அரசாங்க அங்கீகாரம் பெற்ற விலையில் தமக்கு கோழிகளை வழங்குவதில்லை எனவும், போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் இதர செலவுகளுடன் சேர்த்து ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 1,300 ரூபாய்க்கு விற்க முடியும் எனவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதுவரையில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1,450 ருபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததுடன், விலை அதிகரிப்பால் கோழி இறைச்சி விற்பனை குறைந்துள்ளதாக சந்தையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கோழி இறைச்சியின் விலையை கடந்த வௌ்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கிலோ கிராம் ஒன்று 1,250 ருபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கம் விலை நிர்ணயித்து இருந்தது.
