
வீட்டின் கூரை இடிந்து வீழ்ந்ததில் பெண் காயம்
பண்டாரகம கும்புருகுடா பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை காலை வீடொன்றின் கூரை இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக பெய்த மழையினால் அவர் தங்கியிருந்த வீட்டின் கூரை இடிந்து வீழ்ந்துள்ளதுடன் சம்பவத்தின் போது, வீட்டில் மேலும் பலர் தங்கியிருந்ததாகவும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
