
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே ஃப்ராங்க் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் சந்தித்த போது கூறியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கையின் தற்போதைய மீட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
