
மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
மட்டகளப்பில் பிரபல போதைப் பொருள் வியாபாரி ஒருவர் 15 கிராம் 750 மில்லி கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் கடத்தல் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
