
கரடியின் தாக்குதலில் பறிபோன கண்
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு குறித்த நபர் சென்ற போதே கரடியின் தாக்குதளுக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் கரடியிடம் இருந்து தப்பி வந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கரடியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் கண் ஒன்றை இழந்துள்ளதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, சிதம்பரபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
