தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுக்கும் அறிவித்தல்

-திருகோணமலை நிருபர்-

 

கந்தளாய் கிண்ணியாவுக்கான பிரதான நீர் விநியோக குழாய் திருத்த வேலை காரணமாக எதிர் வரும் திங்கள்,செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்களும் கிண்ணியாவுக்கான சீரான நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் நீரைச் சேமித்து சிக்கனமாக பாவிக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.