விபத்தில் தந்தையும் மகளும் பலி

வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 48 மற்றும் 16 வயதுடைய தந்தை மற்றும் மகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

விபத்தின் பின்னர், லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.