
பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்
நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரரும், பிரபல நகைச்சுவை நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று சனிக்கிழமை தனது 66 ஆவது வயதில் இன்று காலை சென்னையில் காலமானார்.
’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமான ஆர்.எஸ்.சிவாஜி அதன் பின்னர், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவர் பேசிய ‘சார், நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்’ வசனம் ரசிகர்களிடையே பிரபலமடைந்து இப்போது வரை பேசப்பட்டு வருகிறது.
நேற்று, இவரது நடிப்பில் ‘லக்கிமேன்’ திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
