
வாடகைக்கு வந்த வீட்டில் முதல் நாளே பலியான குழந்தை
எல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அனுருத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேறு பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட குடும்பம் வாடகை அடிப்படையில் குறித்த வீட்டில் வசிக்க வந்துள்ளனர். வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போது, வீட்டின் காணியில் உள்ள சிறிய கிணற்றில் சிறுவன் விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
