
வழமைக்கு திரும்பிய ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கடவளை பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து 1 மணித்தியாலம் முற்றாக தடைப்பட்டிருந்ததுடன் வீதி அதிகார சபையினரும், பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்து மரத்தை அகற்றிய பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் பெய்த கடும் மழையை தொடர்ந்து குறித்த மரம் சரிந்து வீழ்ந்துள்ளதாக ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளை தற்காலிகமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
