அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி,, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 314 ரூபா 19 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 33 சதமாக காணப்பட்டது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 325 ரூபா 86 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபா 93 சதமாக காணப்பட்டது.
