
பேருந்து கட்டணம் அதிகரிப்பு?
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டண அதிகரிப்பு வீதம் மற்றும் கட்டணம் அமுல்படுத்தப்படும் திகதி என்பன தொடர்பில் தீர்மானிப்பதற்காக தனியார் பேருந்து சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வரும் நிலையில் அதன் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.
நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு தடவையில் 5 ஆயிரம் ரூபா வரையில், நட்டத்தை எதிர்நோக்குகின்றன.
எனவே கட்டாயம் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
