மட்டக்களப்பில் சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நெருக்கடிகள்குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் விவரிப்பு

 

மட்டக்களப்பு வந்திருந்த இலங்கை மற்றும்மாலைத்தீவுகளுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல்ஸ்டீபன்ஸ், மற்றும்அவரது குழுவினர்சிவில் சமூகஆர்வலர்களை நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ற்லகூன் தனியார்விடுதியில் சந்தித்து சமூகங்கள் எதிர்கொள்ளும்சவால்கள் நெருக்கடிகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

ஆயுத முரண்பாடுகளுக்குமுன்னரும் ஆயதமுரண்பாடுகளின்போதும் தற்போதையஆயுத முரண்பாடுகள்முடிவுற்ற நிலையிலும்சமூகங்களுக்கிடையிலான சவால்கள்நெருக்கடிகள் சகவாழ்வின்சீர்குலைவு பற்றிஅங்கு கருத்துக்கள்தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக மட்டக்களப்பில்எரியும் நெருப்பாகஉள்ள காணிப்பிரச்சினைகள் குறித்துஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம்சிவில் சமூகஆர்வலர்கள் விவரித்தனர்.

சமூகங்களுக்கிடையில் நிலவவேண்டிய சகவாழ்வின்முக்கியத்துவம் குறித்தும்அங்கு வலியுத்தப்பட்டது.சிவில் சமூகஆர்வலர்கள் சார்பில்கிழக்கு சமூகஅபிவிருத்தி மையத்தின்நிறைவேற்றுப் பணிப்பாளர்எம்.எல்.எம். புஹாரி முஹம்மத், சிவில் சமூகசெயற்பாட்டாளரும் சட்டத்தரணியும்சகவாழ்வு மையத்தின்ஸ்தாபக சிந்தனையாளருமானஏ. உவைஸ், சிவில் சமூகசெயற்பாட்டாளரும் சமூகஆய்வு எழுத்தாளரும்சுதந்திர ஊடகவியலாளரும் வளவாளருமான ஏ.எச்.ஏ. ஹுஸைன், செயற்பாட்டாளர் முஹம்மத் லியாப்தீன்ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.