
கீறிவிட்டு கணவன் தப்பினார்: மனைவி சிக்கினார்
கட்டுகஸ்தோட்டையில் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன மற்றுமோர் அதிகாரியுடன் கண்டி- மாத்தளை வீதியில் உள்ள அம்பத்தன்ன பகுதியில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனைக்காக முச்சக்கரவண்டியில் ஹெரோய்ன் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி முச்சக்கரவண்டிகளை சோதனையிட்ட போது முச்சக்கரவண்டியில் இருந்த சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதன்போது பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கீறல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
எனினும் முச்சக்கர வண்டியினுள் இருந்த சந்தேக நபரின் மனைவி 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டார்.
தப்பியோடிய கணவன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
