
சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை வைத்திருந்தவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
போயா தினமான நேற்று மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 25 மதுபான போத்தல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபரும் மதுபான போத்தல்களும் மேலதிக நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
