துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்தின் அருகில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த சிலர் வேனில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.