மட்டக்களப்பில் சிறுவர் கழக வழிப்படுத்துனர்களுக்கான செயலமர்வு

– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பில் சிறுவர் கழக வழிப்படுத்துனர்களுக்கான செயலமர்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  சுதர்சினி ஸ்ரீகாந்த் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவில் உள்ள சிறுவர் கழக வழிப்படுத்துனர்கள் கலந்து கொண்டனர் .

இதன்போது எதிர்காலத்தில் மாவட்டத்தில் உள்ள சிறுவர் கழகங்களை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  வழங்கப்பட்டது.

போதைப்பொருள், மதுசாரம் என்பவற்றின் பாதிப்பை பிள்ளைகள் மத்தியில் எவ்வாறு தெளிவுபடுத்த வேண்டும் என்பது பற்றிய  விழிப்புணர்வுகள்  இதன்போது  போதைப்பொருள் முன்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ப.தினேசினால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இந் நிகழ்வில்  மிக்கேல் கல்லூரியின் சாரணர் மாணவர் மேரிஸ்வரசர்மாவினால்  போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும்  பாதிப்புக்கள் தொடர்பான பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர் எம்.ரிழா, மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் நரசிம்மன் ஜனார்த்தனி,மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மதிராஜ்  மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர் .

மட்டக்களப்பில் சிறுவர் கழக வழிப்படுத்துனர்களுக்கான செயலமர்வு

மட்டக்களப்பில் சிறுவர் கழக வழிப்படுத்துனர்களுக்கான செயலமர்வு

மட்டக்களப்பில் சிறுவர் கழக வழிப்படுத்துனர்களுக்கான செயலமர்வு