
இலங்கை அடைந்த முன்னேற்றத்தை ஆராய்வதற்காக இலங்கை வரும் ஐஎம்எஃப்(IMF) பிரதிநிதிகள்
இலங்கைக்கு வழங்கியுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதியின் இரண்டாவது தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 14 ஆம் திகதி நாட்டிற்கு வருகைதரவுள்ளது.
இந்த பிரதிநிதிகள் குழுவினர் செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையஇ பல இலக்குகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
ஜூலை மாத இறுதியளவில் இந்த இலக்குகளில் 35 வீதமானவற்றை மாத்திரமே இலங்கை நிறைவேற்றியிருந்ததாக வெர்டி ரிசேஜ்(Verite Research) நிறுவனம் அண்மையில் வௌியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
