
பாசிக்குடாவில் பாரிய தீ விபத்து
பாசிக்குடா அனந்தயா சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் நேற்று சனிக்கிழமை இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் பிரிவினர் தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பாரியளவில் தீப்பரவல் காணப்பட்டதால் தீயினைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்ததாகவும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
