
தெல்லிப்பழை துர்காதேவி ஆலயத்தின் கைலாசவாகன திருவிழா
-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கைலாச வாகனத் திருவிழா நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து துர்க்கையம்பாள் பிள்ளையார், முருகன், சண்டேஸ்வரி சமேதராக உள்வீதி ஊடாக வலம்வந்து, வெளிவீதியயில் கைலாச வாகனத்தில் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
பெருந்திரளான பக்தர்களுடன் இடம்பெற்ற திருவிழாவைத் தொடர்ந்து வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா இன்று ஞாயிற்றுகிழமையும், தேர்த்திருவிழா நாளைய தினமும் தீர்த்தத் திருவிழா 30 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.


