
வயோதிப தாயை வன்புணர்விற்கு உட்படுத்திய மகன் கைது
ரத்தோட்டை பகுதியில் வயதான தாயை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனையில் வசிக்கும் 74 வயதான வயோதிப தாயொருவர் அவரது 54 வயது மகனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயார் பொலிஸாரிடம் அளித்துள்ள முறைப்பாட்டில், தனது மகனின் உடல்நிலை குறித்து பரிசோதிக்க ஹோட்டலுக்குச் சென்றதாகவும், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் படி ரத்தோட்டை பிரதேசத்தில் அவருக்கு சொந்தமான ஹோட்டலில் வைத்து மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
