கோழி இறைச்சியின் விலை அதிரடியாக குறைப்பு

விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க விவசாய அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கும் அதே அனுகூலத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.