அதிபர் ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளின் முதல் பகுதி, கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானதுடன் இது எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.