சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவி: தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பவில்லை

மெதகம நன்னபுரவ தியகோபால பிரதேசத்தில் தனியார்வகுப்பிற்கு சென்ற தனது மகளை காணவில்லையென தாய் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தியகோபால பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே கடந்த 20ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை என தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மெதகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்