தேர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

நமுனுகுல பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மேலும் மூவர் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூட்டாவத்தை பகுதியை சேர்ந்த  27 மற்றும் 37 வயதுடைய  இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று புதன் கிழமை பிற்பகல் ஆரம்பமான ஊர்வலம் இன்று வியாழக்கிழமை காலை வரை நீடித்ததாகவும், தேரை கோவிலுக்கு கொண்டு செல்லும் போது, உயர் அழுத்த மின்கம்பியில் தேரின் மேல்பகுதி மோதி மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்