கேபில் மகிழுந்து பழுது: 8 பேர் 12 மணி நேரம் தொங்கிய நிலையில் மீட்பு

பாகிஸ்தானில் கேபில் மகிழுந்து பழுதடைந்தமையினால் 8 பேர் விபத்துக்குள்ளாயுள்ளதுடன் அதன் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலைக்கு சென்ற மாணவர்களும் ஆசிரியருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த கேபல் மகிழுந்தில் 8 பேரும் 12 மணி நேரங்கள் தொங்கிய நிலையில் மீட்பு படையினரின் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டுள்ளதுடன் அலட்சியமான தன்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கேபில் மகிழுந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்