
ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல் போன 26 வயது தாய் : நடந்தது என்ன?
சம்பவம் ஒன்று லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – லோகி தோட்டப் பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த தோட்டப் பகுதியில் நேற்று முதல் தமது ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல் போயிருந்த 26 வயதுடைய தாய், அந்த தோட்டத்தில் உள்ள குளத்தில் பாய்ந்து தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அவரது சடலம், இன்று புதன்கிழமை குறித்த பகுதியில் உள்ள குளத்தில் மிதந்து கொண்டிருந்ததை அவதானித்த அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் பிரதேசவாசிகளின் உதவியுடன் அவரின் சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில், அவர் எழுதிய கடிதம் ஒன்றும் காவல்துறையினரால், கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், தமது குடும்பத்தினரால் தமக்கும் தமது குழந்தைக்கும் ஏற்படுத்தப்பட்ட துன்புறுத்தல்கள் காரணமாகவே இந்த முடிவை எடுக்க நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அவரது குழந்தையை தேடும் பணியை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
