
இந்து கோவில் இடிந்து வீழ்ந்தமையினால் 9 பேர் பலி
இந்திய வட மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பழமையான இந்து கோவில் இடிந்து வீழ்ந்தமையினால் 9 பேர் பலியானதுடன் 25 பேர் வரை இடிபாடுகளுக்கு இடையே சிக்குண்டிருக்கலாம் என மாநில தலைமை அமைச்சர் சுக்விண்டர் சிங்ஹா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொடர்ச்சியாக கடும் மழையுடன் வெள்ளப்பெருக்கு மற்றும் சிம்லா நகரத்தில் நிலசரிவுகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தினுள் 21 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் காலநிலை மாற்றத்தினால் மீட்பு பணிகள் மெதுவாகவே இடம்பெறுகின்றன.
மாநிலத்தில் உள்ள வேறு நான்கு இந்துக்களின் ஆலயங்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
