
நண்பர்களுடன் சேர்ந்து நடன ஆசிரியர் 6 மாதமாக கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம்…
முன்னாள் தோழியை தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் (Gang Reaping) செய்த குற்றச்சாட்டின்பேரில் நடன ஆசிரியரும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா – கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடன ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆண்டி ஜார்ஜ். இவர் சோஷியல் மீடியா மூலமாக கல்லூரி படிக்கும் மாணவியை தொடர்பு கொண்டுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நிலையில் நடன ஆசிரியரும் கல்லூரி மாணவியும் தனிமையில் உடலுறவு வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஆண்டி ஜார்ஜ் வீடியோவை பதிவு செய்துஇ அதனை வெளியிடப் போவதாக மாணவியை மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து ஜார்ஜ் உடனான உறவை குறைத்துக் கொண்ட மாணவி பின்னர் உறவை துண்டித்துள்ளார். இது ஆசிரியருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, உடலுறவுக்கு மறுப்பு தெரிவித்தால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கூறி, கல்லூரி மாணவியை ஆசிரியர் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அவருடன் கூட்டு பலாத்காரத்தில் அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் சாஷி ஆகியோர் இணைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்களையும் வீடியோவையும் ஆசிரியர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்ட பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கைத்தொலைபேசி, பென் ட்ரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோன்று இன்னும் சில பெண்களிடம் நடன ஆசிரியர் குற்றம் செய்திருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
