நர்த்தன கலாச்சார விழா

நர்த்தன கல்சரல் பெஸ்டிவல் என்ற தலைப்பில் இன்று செவ்வாய் கிழமை பி.ப 3.30 மணியளவில் சப்பரகமுவ பல்கலைகழக தமிழ் மாணவர்கள் மற்றும் நர்த்தனகலாலயம்(நாவற்குடா) இணைந்து மட் /மகாஜன கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வின் ஆரம்ப கட்டமாக அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மௌன இறை வணக்கம் இடம்பெற்றது. பின்னர் சப்ரகமுவ பல்கலைகழக மாணவனால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டதுடன் மாணவர் ஒன்றியத்தின் தலைவரினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.

தலைமை உரையினை தொடர்ந்து வரவேற்பு நடனம் ஜெ.கீதாஞ்சலி மற்றும் எச்.எம்.சாந்னி ஹெரத் ஏற்பாட்டில் தமிழ் மற்றும் சிங்கள பாணியில் அரங்கேற்றப்பட்டது.

மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பயிற்றுவிப்பாளர்களுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.