நாட்டில் அதிகரித்த சட்டவிரோத கருக்கலைப்பு

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருக்கலைப்புச் செய்வோரில் கூடுதலானவர்கள், திருமணம் முடிக்காதவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோத கருத்தரித்தல் உள்ளிட்ட பெரும்பாலான தவறுகள் முக்கியமாக அலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் உறவுகளால் ஏற்படுவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான தவறுகள் 2020 ஆம் ஆண்டு 34 ஆக காணப்பட்டதுடன் 2021 இல் 48 ஆக அதிகரித்துள்ளது. இது 41 சதவீத அதிகரிப்பு என்பதுடன் மேலும் 2022 இல் 65 ஆக அதிகரித்த கரு கலைப்பு 35 சதவீத அதிகரிப்பாகும் என பொலிஸ் தலைமையகத்தின் 2022 வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்